இலவச திட்டங்களால் திராவிடக்கட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றன என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அவர் பேசியது:
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் மக்களை கால்பந்துபோல் பந்தாடியுள்ளன. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது பலம்வாய்ந்த கட்சியாக பாஜக உள்ளது. எங்களது கரத்தை வலுப்படுத்தினால், தமிழகத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டுவோம்.
தேர்தல் நேரத்தில் திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து ஆட்சிக்குவருவது வழக்கமாகி விட்டது.
தமிழக மக்கள் இலவசங்களை தவிர்த்து சுயமாக முன்னேறவேண்டும். இலவசங்களை காட்டி மக்களை திராவிடக்கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இயற்கைவளங்கள் நிறைந்த தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு திராவிடகட்சிகளின் இலவச திட்டங்கள்தான் காரணம்.
தமிழகத்தில் இது வரை இலவச திட்டங்களுக்கு ரூ.11,500 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து 25 ஆயிரம் பள்ளிகள் திறந்து இருக்கலாம். தமிழகத்தில் மின்பற்றக்குறை தீர்ந்து விட்டால் தொழிற்சாலைகள் பெருகும். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும். பல ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
மின்சார உற்பத்தியில் அதிமுக அரசு மெத்தனம் காட்டுகிறது. தமிழகத்தில் மின்பற்றாக் குறைக்கு இதற்குமுன் ஆட்சிசெய்த அரசும், அவர்கள் அங்கம் வகித்த காங்கிரசும் முக்கிய காரணம். சென்னை வெள்ளத்தால் பாதித்தமக்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டு உடனடியாக ரூ. 2 ஆயிரம் கோடியை நிவாரணத் தொகையாக வழங்கினார். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் விதிக்கப் பட்டிருந்த தூக்குத் தண்டனையை பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி தடுத்து நிறுத்தினார்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லக்கூடாது என இலங்கை அரசை நிர்பந்தம் செய்தார் என்றார்.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.