பிரதமர் நரேந்திரமோடி வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஈரானில் சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திரமோடி வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கச்சா எண்ணெய் வழங்கும் நாடாக ஈரான் விளங்குகிறது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 2 மடங்காக அதிகரிக்க இந்தியாவிரும்புகிறது. ஈரான் நாட்டின் சாபார் துறைமுகத்தை மேம்படுத்தவும், மிகப் பெரிய எண்ணெய் வயல் ஒன்றை மேம்படுத்துவதற்கான உரிமைபெறவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரூஹா னியின் அழைப்பை ஏற்று மே 22, 23 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடி ஈரானில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்தப்பயணத்தின் போது ஈரான் அதிபரை சந்திக்கும் மோடி, இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுகிறார். இந்தியா – ஈரான் இடையிலான பிராந்தியதொடர்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி துறை மேம்பாடு, இருதரப்பு வர்த்தகம், இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள், பிராந்திய அமைதி ஆகியவை இந்த ஆலோசனையில் முக்கிய இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டபிறகு அந்நாட்டுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்த ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம்காட்டி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் மோடி ஈரானில் பயணம்செய்கிறார். பிரதமரின் பயணத்தையொட்டி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் ஆகியோர் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...