கோவை மாவட்டத்தில் மொத்த முள்ள பத்து தொகுதிகளில் இரண்டைத்தவிர அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியை பின்னுக்குத்தள்ளி பாஜக மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைத்தவிர மீதமுள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா, மதிமுக ஆகிய கட்சிகளைச்
சேர்ந்தவேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
ஆனால் மேட்டுப் பாளையம், வால்பாறை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் மநகூவை சேர்ந்த வேட்பாளர்களை நான்காவது இடத்துக்குத்தள்ளி பாஜக மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது. இதில், பொள்ளாச்சியில் மட்டும் பாஜக 4வது இடத்தையும், தேமுதிக ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
கோவையில் குறிப்பட்ட செல்வாக்கை பெற்றிருந்த கம்யூனிஸ்ட்கள், மதிமுக, தேமுதிக தங்களது செல்வாக்கை இழந்துள்ளன. இவர்கள்மீது காட்சிய பரிவை தற்போது பாஜக மீது கோவைமக்கள் காட்ட தொடங்கியுள்ளனர். பாஜக சார்பில் கோவை தெற்குத்தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளை பெற்றுள்ளார். தோல்வி அடைந்தபோதிலும் இது நல்ல எண்ணிக்கை என்பது குறிப்பிடத் தக்கது. .
Leave a Reply
You must be logged in to post a comment.