சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்விடைந்தாலும், கணிசமான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமாக இடங்களைப்பெற கிராமப்புறங்களில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தழுவினாலும், வாக்கு சதவீதத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதோடு, பலதொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், பாமக, மக்கள் நலக்கூட்டணியைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன் 19,167 வாக்குகளும், தியாகராய நகரில் போட்டியிட்ட தேசியச்செயலர் ஹெச்.ராஜா 19,888 வாக்குகளும், வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் 14,472 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதே போல், மேற்கு, தெற்கு மண்டலங்களில் உள்ள சிலதொகுதிகளில் 2 ஆம் இடங்களை பிடித்துள்ளது.
இதேபோல், கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் தோல்விகண்டபோதிலும், வைப்புத் தொகையை தக்கை வைத்துக் கொண்டதோடு தொகுதிமுழுவதும் வாக்காளர்களுக்கு நன்றிகூறி வருகிறார்.
இதன் மூலம், சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பலதொகுதிகளை அதிமுக இழந்ததற்கு பாஜக வாங்கிய வாக்குகள் முக்கியகாரணமாக உள்ளது என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் திங்கள் கிழமையும், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட்டம் செவ்வாய்க் கிழமையும் நடைபெற உள்ளன.
இந்தக்கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர்கள் சுற்றுப் பயணம்: மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொறுப்பேற்ற 3-ம் ஆண்டு தொடக்கவிழா மே 26-இல் நடக்கிறது.
அதையொட்டி, கட்சி தலைமை தமிழகமக்களை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்க உள்ளனர்.
அதன்படி, சென்னையில் மனோகர் பாரிக்கர், சேலத்தில் சதானந்தகௌடா, மதுரையில் ஸ்மிருதி இரானி, கோவையில் உமாபாரதி, நாகர்கோவிலில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கிராமங்கள் தோறும் சென்று மக்களைசந்திக்க உள்ளனர்.
அதோடு, பாஜக அரசின் மக்கள் நலத் திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடிக்க கிராமங்களை பலப்படுத்த பாஜக வியூகம்வகுத்து வருகிறது.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.