பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது, சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவது உள்பட இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதே தனதுநோக்கம் என்று அவர் தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக் கிழமை வந்த பிரதமர் மோடியை அந்நாட்டு நிதியமைச்சர் அலி தய்யேபினியா வரவேற்றார். மோடியுடன் மத்திய தரை வழி- கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் சென்றுள்ளார்.
பிறகு இருவரும், இந்திய வம்சாவளி யினரை சந்திப்பதற்காக, அங்குள்ள சீக்கிய குருத்வாராவுக்குச் சென்று வழிபட்டனர்.
இந்தப் பயணம் தொடர்பாக, மோடி தனது பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஈரான் தலைவர் அலிகமேனி, அதிபர் ஹஸன் ரௌஹானி ஆகியோரைச் சந்தித்துப்பேசவுள்ளேன். இந்தச் சந்திப்பு, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு வாய்ப்பாகஅமையும்.
மேலும், சாப்ஹார் துறைமுகமேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். ஈரானிடம் இருந்து எண்ணெய்இறக்குமதியை இரட்டிப்பாக்குவது குறித்து பேச்சுவார்த்தை முடிவுக்குவரும் என எதிர்பார்க்கிறேன் என்று மோடி தனது சுட்டுரைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் இடையே போக்குரவத்து தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம் இந்தப்பயணத்தில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடனிருப்பார்.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்ஹார் துறை முகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல்போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கான முடிவு, கடந்த 2003-ம் ஆண்டே எடுக்கப்பட்டது. எனினும், ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருந்த தடைகளின்காரணமாக அத்திட்டத்தை முன்னெடுக்க இயலவில்லை.
இந்நிலையில், ஈரான்மீதான பொருளாதாரத் தடைகள், கடந்த ஜனவரி மாதம் அகற்றப்பட்டதை தொடர்ந்து, சாப்ஹார் துறைமுகத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியா தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.