ஒரு ரூபாய்க்கு டீ வாங்கமுடியாத காலத்தில், 1 ரூபாய்க்கு காப்பீடு தந்துள்ளோம்

நாட்டின் வளர்ச்சி பற்றி உங்களிடம் பேச எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏசி அறையில் அமர்ந்துகொண்டு ஏராளமான மக்கள் வெயிலில் ஏன் அவதிப்படுகின்றனர் என யோசித்தால் முடிவு எதுவும்வராது.

நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தெரிவிக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு காரணம், நாட்டில் ஜனநாயகத்தை ஆதரித்துபேசும் சிலர் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கமறுப்பதேயாகும்.

ஒரு ரூபாய்க்கு டீ வாங்கமுடியாத மக்களால், இன்று 1 ரூபாய்க்கு காப்பீடு பெற்றுள்ளனர். இதனால் பலர் பயன் பெற்றுள்ளனர்.தூய்மை இந்தியா திட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இது பலஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்கும்போது, அவர்கள் மண்ணிலிருந்து தங்கத்தை அறுவடை செய்வார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களை சந்தித்துள்ளேன். அவர்களிடம் வறட்சியை சமாளிக்க மத்தியமாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் எனக் கூறியுள்ளேன். இடைத்தரகர்கள் இல்லாத அரசை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நம் நாட்டுமக்கள் தேவையில்லாத பல சட்டங்களால் கடும் துன்பப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற மக்களுக்கு சுமையாக உள்ள 1200 சட்டங்களை நீக்கியுள்ளோம்.

இன்னும் ஒருசில விஷயங்கள் செய்யாமல் இருக்கலாம், ஆனால் நாட்டை தவறானபாதையில் செல்லவிட மாட்டேன். பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.

உங்களைபோன்ற ஏராளமான மக்கள் என் மீது அன்பு வைத்துள்ளனர். இதனால், தவறானபாதையில் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாட்டை தவறானபாதைக்கு அழைத்து செல்ல மாட்டேன். மக்கள் மாற்றத்தை உணர்கிறார்கள். நாட்டை புதியதோர் உச்சத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘விகாச பர்வ‘ என்ற பெயரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் இன்று சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...