பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 2 ஆண்டை நிறைவுசெய்திருக்கிறது. அவரது ஆட்சியின் 3வது ஆண்டில் பலமுக்கிய சட்டங்கள் நிறைவேறும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசு(என்.டி.ஏ.) கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இந்தவெற்றியை தொடர்ந்து பா.ஜ.கவின் தலைவரும் ,குஜராத் முதல்வராகவும் இருந்த, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவரது தலைமையிலான அரசு தற்போது 2ஆண்டுகளை பூர்த்திசெய்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் மோடி அரசு பல முக்கிய சட்டங்களை 3வது ஆண்டில் நிறைவேற்றும் என மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
மோடி பதவியேற்றதும் முந்தைய ஆட்சிநிர்வாகம் போல் அல்லாமல் புதிய மாற்றத்தைகண்டது. பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்களும் அரசியல் மற்றும் நிர்வாக கலாச்சாரத்தில் பெரும்மாற்றம் செய்து இருக்கிறார்கள். மோடி அரசில் வெளிப்படைத் தன்மை நிலவுகிறது. கோப்புகள் எந்தவித தடையும் இல்லாமல் விரைவில் பார்க்கப் படுகின்றன. மோடி அரசில் இடைத்தரகர்களோ வேலை இல்லாதிண்டாட்டமோ கிடையாது. உலக பொருளா தாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவேகமாக வளர்ந்து வருகிறது.
கூட்டாட்சி எப்போதும் இல்லாதளவு மிகவும் மதிக்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு முதலீடு தேவைப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் மிகவும் தள்ளாடின. ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 2ஆண்டுகளில் அதிகளவு முதலீடு வந்துள்ளது. பொதுசெலவினமும் அன்னிய நேரடி முதலீடும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, கிராமப்புறங்கள் மற்றும் இந்தியாவின் சமூகதுறை ஆகியவை மேம்படுத்தப் படுகின்றன. நெடுஞ்சாலைத் துறை மீண்டும் மலர்ச்சிபெற்றுள்ளது. இந்திய கிராமப்புறங்களுக்கான இந்தய ஆண்டு செலவினம் முன்னர் இருந்ததைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
நாட்டில் மேலும் 25 பிராந்திய விமானநிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. ரயில்வேத் துறை வலிமைப் படுத்தப்படுகிறது. 400 முக்கிய ரயில்வே நிலையங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இந்தமேம்பாடு நடவடிக்கையால் இந்திய ரயில்வேத்துறையின் நிலையில் பெரும் மாற்றம் வரும்.
இந்தியாவிற்கு தேவையான மின்சார அளவைக் காட்டிலும் கூடுதலான மின்சாரம் உள்ளது. கூடுதல் முதலீட்டின் மூலம் துறைமுகதிறன் வலிமைப் படுத்தப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான நடடிவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மின்சாரவசதி, கிராமப்புற சாலைகள் விரிவாக்கம், கிராமப்புற தூய்மை, அனைவருக்கும் வீடு, பாசனவசதியை மேம்படுத்துதல், கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு கூடுதல்தொகை, விவசாயிகளுக்கு தேவையான நிதிக்காக கூடுதல் முதலீடு ஆகியவை இந்தியாவின் கிராமப்புற மேம் பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.