""மாநிலங்களின் வளர்ச்சியே பாஜக தலைமையிலான மத்திய அரசின் லட்சியம்'' கடந்த 2 ஆண்டுகளில் ஆற்றியபணிகளை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில் நாட்டின் பிரதமசேவகன் என்ற முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் இது போன்று தங்களது பணிகளை நாட்டுமக்களிடம் கூறியதுண்டா? அவர்கள் அனைவரும் தேர்தல்நேரத்தில் மட்டுமே வருவார்கள். இந்த நிகழ்ச்சி வெற்றிக் கொண்டாட்டவிழா அல்ல; எனது கடமையாகும்.
அனைத்து அரசுகளும், தலைவர்களும் தங்களது பணிகளையும், அவற்றுக்கான செலவுகளையும் மக்கள்மத்தியில் தெரிவிக்கவேண்டும் என்ற கலாசாரத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள மாநிலங்கள் கடல் வளம், நிலக்கரி, தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அதிகளவில் கொண்டுள்ளன.
இருந்த போதிலும், இந்தப் பகுதிகள் வளர்ச்சியில் பின் தங்கியே இருப்பது ஏன்? இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வேலைவாய்ப்பு தேடி ஏன் மேற்குப்பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்குச் செல்லவேண்டும்?
இங்குள்ளவர்கள் ஏன் இன்னமும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்? இந்தநிலையைப் போக்குவதற்கு, ஒடிஸா, மேற்கு வங்கம், பிகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
"வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தை கடந்த 50 ஆண்டுகளாக கேட்டுவருகிறோம். (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்). அவர்களின் குறிக்கோளை நான் சந்தேகிக் கவில்லை. அவர்களின் நோக்கம் நன்றாக இருந்த போதிலும், வறுமை ஒழிப்புக்கு அவர்கள் தேர்ந்தெடுத்தபாதை தவறானது. ஆகையால் தான், வறுமை, வேலையின்மை, நோய்கள் ஆகியவை அதிகரித்துவிட்டன.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஏழைகளின் நலனை மையப்படுத்தியே இருக்கவேண்டும் என்பதில் எனது அரசு உறுதியுடன் உள்ளது. ஏழைமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது எனது அரசு என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். எந்தவொரு மாநிலமும் வளர்ச்சியில் பின் தங்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு கூறினேன். நாடுமுழுவதும் ஒரே சீரான வளர்ச்சி இருக்கவேண்டும். அதன் பலனை ஒவ்வொருவரும் அனுபவிக்கவேண்டும். ""அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி'' என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எனவே, இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது.
அனைத்து அரசுகளும் வசதி படைத்தவர் களுக்கானவை அல்ல; ஏழைகளுக்கானவை. வறுமை ஒழிப்புக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும் வரை, அதை ஒழிக்கமுடியாது. வறுமையை ஒழிப்பதற்கான போராட்டத்தில் மக்களும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
ஒரு பாஜக தொண்டராக, வளர்ச்சி என்பதே எனது தாரகமந்திரமாக உள்ளது. பாஜக ஆட்சி நடைபெறும் அனைத்து மாநிலங்களும் வேகமாக வளர்ச்சி யடைந்து வருவதைக் காண முடிகிறது. ஒடிஸா போன்ற பாஜக ஆட்சியல்லாத மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்க்கிறீர்கள். ஒடிஸாவிலும் அரசியல்மாற்றத்தை இந்த மாநில மக்கள் ஏற்படுத்தவேண்டும்.
பாஜகவின் மற்றொரு பெயர் வளர்ச்சி என்பதாகும். வறுமை, வேலை யின்மை ஆகியவற்றை ஒழித்து, வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வளர்ச்சி அவசியமாகும்.
வளர்ச்சியே அனைத்துபிரச்னைகளுக்கும் தீர்வாகும். கடுமையான வெயிலையும் பொருள் படுத்தாமல் இந்தக் கூட்டத்துக்கு ஏராளமானோர் வந்திருப்பதை தில்லியில் குளிர் சாதன அறையில் இருந்துகொண்டு நாள் முழுவதும் நாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் சில அரசர்கள் (எதிர்க்கட்சியினர்) அதிகம் அறிய மாட்டார்கள்.
சிறுதொழில் செய்வோருக்கு நிதியுதவி அளிக்கும் விதமாக, "முத்ரா' கடன் வழங்கும்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம்செய்தது. அதன்படி, ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப் பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 3.5 கோடிப்பேர் கடனுதவி பெற்றுள்ளனர். அவர்களில் பலர் கடனைத் திருப்பிச்செலுத்த தொடங்கியுள்ளனர். இது, அவர்களின் உயர்ந்த குணத்தை பிரதிபலிக்கிறது.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், ஒடிஸா மாநிலம், பாலாசோரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது:
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.