நாராயணசாமி பதவியேற்பதற்குள் ஒரு ரவுண்டு புரட்சியை முடித்து விடுவார் போல கிரண்பேடி!

மக்களின் நலன் சார்ந்து புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து கலக்கி வரும் புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநர் கிரேண் பேடி, தற்போது மேலும் ஒருபடியாக வாட்ஸ்ஆப் குரூப்பில் உயர் அதிகாரிகளுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கிரேண் பேடி, பொறுப்பேற்ற சிறிது நாட்களிலேயே மக்களை கவரும் வகையில் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மேலும், அரசு எவ்வாறு பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் எடுத்துக்காட்டும் அளவிற்கு அவர் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் மக்களுக்காக 1031 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியிருந்தார். இதன் மூலம் மக்கள் தாங்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் எளிதில் புகார் தெரிவிக்க முடியும். ஆக்கிரமிப்புகள் அகற்றம், ஊழல் முறைகேடுகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அடுத்த வாரம் முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இதேபோல, அடிப்படை மற்றும் பொதுப்பிரச்சினைகள், பேரிடர் போன்றவற்றுக்காக 1070 என்ற இலவச தொலைபேசியும் அடுத்த வாரம் செயல்பாட்டுக்கு வருகிறதாம். இந்த எண்ணை அடுத்த வாரத்தில் நிறுவ கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

அரசுத்துறை அலுவலகம் என்றால் எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை உடைத்தெறியும் வகையில் அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் காலை 9.30 மணிக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும். மேலும், மாலை 5 மணி முதல் முதல் 6 மணி வரை பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்டவர் ஒழுங்காக இருக்காரா என கேள்வி மக்களிடையே எழலாம். அதற்கும் தனது செயல்பாட்டின் மூலமாக பதில் அளித்திருக்கிறார் கிரேண்பேடி. ஆளுநர் மாளிகையில் தன்னை சந்திக்க வரும் மக்களிடம் தானே நேரடியாக குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்தும் வருகிறாராம்.

உயரதிகாரிகளை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக வாட்ஸ்அப் குரூப்பில் கிரேண்பேடி இணைத்துக் கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் தலைமைச் செயலர், துறை செயலர்கள், ஐஜி, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரச்சினைகளை அனுகக்கூடிய அந்தந்த துறைகளின் அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளார்களாம். இதன் மூலம் துணை நிலை ஆளுநராக உள்ள கிரேண்பேடி, தனக்கு தெரியவரும் மக்கள் பிரச்சனைகளை எளிதில் அதிகாரிகள் மத்தியில் கொண்டு செல்ல முடியும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...