எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது விரைவில் அனுமதி

பாரத ஸ்டேட்வங்கி (எஸ்பிஐ) மற்றும் அதன் துணை வங்கிகளை இணைப்பது தொடர்பான பரிந்து ரைக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.

எஸ்பிஐ மற்றும் அதன் 5 சிறிய வங்கிகளோடு பாரதிய மகிளா வங்கி யையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுதொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்பட்டு அதற்கு அரசு அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று ஜேட்லி கூறினார்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மற்றும் எதிர் கால நடவடிக்கை குறித்து வங்கிகளின் தலைவர்களோடு நிதி அமைச்சர் ஜேட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கூறியது: இப்போதைக்கு எஸ்பிஐ பரிந்துரை மட்டுமே அரசு எதிர்நோக் கியுள்ளது. வங்கிகளை இணைப்பது தொடர்பான பாரத ஸ்டேட்வங்கியின் பரிந்துரைக்கு அரசு பதிலளிக்க வேண்டி யுள்ளது. பொதுவாக வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இதைத் தான் பட்ஜெட் உரையின் போதும் வலியுறுத்தி யிருந்தேன் என்று ஜேட்லி கூறினார்.

அரசின் ஒப்புதல் எவ்வளவு விரைவில் வெளியாகும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எஸ்பிஐ வங்கிஇணைப்பு குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக ஜேட்லி பதிலளித்தார்.

கடந்த மாதம் பாரதஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைப்பது தொடர்பான பரிந்துரைக்கு எஸ்பிஐ ஒப்புதல்அளித்தது. இந்த ஒப்புதல் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன்துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட்பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட்பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 வங்கிகளில் ஸ்டேட்பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவங்கிகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட வையாகும்.

வங்கிகள் இணைக்கப் பட்டால் ரூ.37 லட்சம் கோடி பரிவர்த்தனையோடு 50 கோடி வாடிக்கை யாளர்களைக் கொண்ட பெரியவங்கியாக எஸ்பிஐ உருவாகும்.

2008-ம் ஆண்டு பாங்க் ஆப் சௌராஷ்டி ராவை தன்னுடன் இணைத்துக் கொண்டது எஸ்பிஐ. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டேட்பாங்க் ஆப் இந்தூர் இணைக்கப்பட்டது.

வங்கி இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ எடுத்துவந்தாலும் போதிய மூலதனம் இல்லாததால் அவற்றை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவங்கிக்கும் குறைந்தது ரூ.2 ஆயிரம்கோடி மூலதனம் தேவைப்படுகிறது. மேலும் வங்கி ஊழியர்களின் கடுமையான எதிர்ப்பு காரண மாகவும் இணைப்பு நடவடிக்கையை எஸ்பிஐ-யால் கடந்தகாலங்களில் மேற்கொள்ள முடியவில்லை.

எஸ்பிஐ வங்கிகள் ஒருங்கிணைக்கப் பட்டால் அது நிர்வகிக்கும் தொகை ரூ.37 லட்சம் கோடியாக இருக்கும். வங்கிக்கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயரும். ஏடிஎம்களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயரும்.

எஸ்பிஐ-க்கு மட்டும் நாடுமுழுவதும் 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் 36 நாடுகளில் உள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...