இந்தியாவில் ஆறு அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதை அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் வரவேற்றுள்ளனர்.
இந்தியாவும் ஏற்றுமதி-இறக்கு மதிக்கான அமெரிக்க வங்கியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகுறித்து ஒத்துழைத்து வருகின்றன.
இந்திய அணுவாற்றல் நிறுவனமும், தொஷிபா (Toshiba) நிறுவனத்தின் வெஸ்டிங்ஹௌஸ் இலெக்ட்ரிக்கும் (Westing house Electric) அதன் தொடர்பிலான பொறியியல், வடிவமைப்பு திட்டத்தை உறுதிசெய்யவுள்ளன.
அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதற்கான ஒப்பந்தம் செய்யப்படும். இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு ஆண்டில் ஏழாவது முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அணுவா யுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியாசேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம் அளித்தார்.அணுவாயுத அதிகரிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் புதுடில்லி இடம்பெறாத போதிலும் அதில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தது.
இந்தவாரம் அந்தக் குழுவினர் சந்திக்கவிருக்கின்றனர்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.