அணு சக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினரா வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தியா- பாகிஸ்தான் உறவு நன்றாகஉள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் சார்க்நாடுகளுடனான உறவு வலுப்பெற்றுள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா பலப் பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 10 மாதங்களில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் கத்தார், ஈரான், ஈராக் உள்ளிட்ட பலநாடுகளுக்கு சென்றுள்ளார். அந்நாடுகளுடனான பொருளாதாரம் வலுப் பெற்றுள்ளது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,69,000 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு கிடைத்தது. கடந்த 2015 -16 -ஆம் நிதியாண்டில், 55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியமுதலீடாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் இந்தியா 140 நாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளும் தொடர்புகொள்ளப்படும்.
உலகநாடுகள் மத்தியில் இந்தியர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என கூறினார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட வில்லை. பதான் கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் விசாரணைக்காக காத்திருப்ப தாகவும் தெரிவித்துள்ளார்
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.