பாஜக., முதலில் தேசத்தையும், அடுத்த இடத்தில் கட்சியினையும், மூன்றாவது இடத்தில் தலைவர் களையும் வைத்து கட்சி நடத்துகிறது. இது மற்றகட்சிகளில் இருந்து மாறுபட்ட கட்சி என, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பாஜக.,ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்ககூட்டம் தனியார் திருமணமகாலில் நடந்தது. மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி தலைமை வகித்தார். மாவட்டதலைவர் பாலாஜி வரவேற்றார். மாநில பொது செயலாளர் எஸ்.ஆர்.சரவணப்பெருமாள், கோட்டபொறுப்பாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசியசெயலாளர் தருண் சிங் பேசியதாவது: 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., அரசு சோனியா காந்தியின் ரிமோட்டால் இயங்கிய மன் மோகன்சிங் பிரதமராக இருந்தார். இந்த ஆட்சியில் ஊழலும், 2 ஜி ஸ்பெக்டரம், காமன்வெல்த் ஆகிய பல்வேறு ஊழல்களை செய்தது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், சாமானியமக்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளனர். முக்கிய திட்டங்களாஜ விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம், ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு திட்டம், 21 கோடி போர் கணக்கு துவக்கியுள்ளனர். 38 ஆயிரம்கோடி ரூபாய் பணம் செலுத்தியுள்ளனர். முத்ரா வங்கி கடன் போன்ற பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது. காஸ்மானிய திட்டத்தில் ஒருகோடி பேரின் மானியத்தை பிரதமர் வேண்டுகோளின் படி விட்டுக் கொடுத்தனர். அந்த பணத்தில் 5 கோடி ஏழைகளுக்கு இலவச காஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என அவர் பேசினார்.
சுரங்கம் மற்றும் இரும்பு எக்குத்துறை இணையமைச்சர் விஷ்ணுதியோ சாய் பேசியதாவது:
இன்று உலகில் உள்ள கட்சிகளில் 10 கோடி உறுப்பினர்களை கொண்டகட்சியாக பாஜக., உள்ளது. இந்தியா ஊழல்மிகுந்த நாடு என்ற பெயரை பெற்றிருந்தது. நரேந்திர மோடி உலக நாடுகளுக்குசென்று இந்தியாவிற்கு தனி மரியாதையையும், அந்தஸ்தையும் பெற்றுவருகிறார். அவரது தாரக மந்திரம் ""எல்லோரும் சேர்த்து, எல்லோருக்கும் வளர்ச்சி'' ""நானும் சாப்பிடமாட்டேன், அடுத்தவர்களையும் சாப்பிட விடமாட்டேன் என்ற நிலையில் இருந்து வருகிறார் மோடி. நிலக்கரி சுரங்கம் போன்றவைகளில் பெறப்படும் வருமானம் அந்தந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக வழங்கப் பட்டு வருகிறது. பொதுமக்களின் கருத்து கேட்டுத்தான் வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதற்கேற்பட பட்ஜெட்போடப்பட்டு வருகிறது என, அவர் பேசினார்.
மத்திய திறன் மேபாட்டுத்துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப்ரூடி பேசியதாவது: தற்போது
நடந்த தமிழக தேர்தலில் பா.ஜ.க., கட்சி தோற்றுப் போனதால், தாங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளோம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். உங்கள் பின்னால் இந்தியாவில் 2000 பாஜக., எம்.எல்.ஏ.,க்கள் 325 எம்பி.,க்கள், 15 முதல் அமைச்சர்கள் உள்ளனர். பாஜக.,கட்சி வித்தியாசமான மாறுபட்டகட்சியாகும். முதலில்தேசம், இரண்டாவது கட்சி, அதன் பின் தான் கட்சித் தலைவர்கள். மற்ற கட்சிகளில் முதலில் கட்சித் தலைவர், அடுத்த படியாக கட்சி, அதன் பின்தான் தேசத்தை பற்றி நினைக்கின்றனர்.
1980 ல் பாஜக., துவக்கப்பட்டது. 1984 ல் இரண்டு எம்.பி.,க்கள் மட்டுமே வெற்றி பெற்றோம். 2014 ல் 284 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று தனிப் பெருமான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளோம். அசாம் மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றோம் இன்று ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றுள்ளோம். கேரளாவில் ஒரு எம்.எல்.ஏ., வெற்றிபெற்றுள்ளார். அடுத்த தேர்தலில் அங்கு பா.ஜ.க., ஆட்சி அமைக்கும். அதே போல் தமிழ் நாட்டில் விரைவில் பா.ஜ.க., ஆட்சியினை அமைக்கும், என அவர் பேசினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.