மத்தியசாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மரக் கன்றுகளை நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் மிகவும் அவசியம். சாலைகள் அமைப் பதற்காக ஏராளமான மரங்களை வெட்ட வேண்டி உள்ளது. அதே நேரம் முடிந்தவரை மரங்கள் வெட்டப் படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மரக்கன்றுகள் நடுவது ஊக்குவிக்கப்படும்.
ரூ.5 லட்சம் கோடியில் சாலை கட்டுமான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. இதில் 1 சதவீதம் (ரூ.5,000 கோடி) மரக்கன்றுகள் நடவும் மரங்களை பாதுகாக்கவும் ஒதுக்கப்படும். இதன் ஒருபகுதியாக, வரும் ஜூலை 1-ம் தேதி 1,500 கி.மீ. தூர நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட திட்டமிடப் பட்டுள்ளது.
மேலும் சாலை, போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக வளாகத்தில் தானியங்கி வாகன நிறுத்துமிடம் கட்டப்பட உள்ளது. இதனால் இங்குள்ள 4 மரங்களை வேருடன் எடுத்துச் ன்று நெடுஞ் சாலையோரம் நடப்படும்.
மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தன்னார்வத் தொண்டு நிறு வனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அறக்கட்டளைகள், கூட்டுறவு அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை முன்வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.