பிரதமர் மோடியை உலகவங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். இந்தியாவில் சூரிய மின் சக்தி விரிவாக்க திட்டங்களுக்கு உலகவங்கி ரூ.6,700 கோடி நிதியுதவி தருவதாக அறிவித்தது.
சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் உபயோ கத்தை பெருக்குவதை குறிக்கோளாக கொண்டு, இந்தியா தலைமையில் 121 நாடுகளை கொண்டு சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணி என்ற அமைப்பு செயல்படுகிறது.
உலகளவில் சூரியமின்சக்தி உபயோகத்தை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்கும் விதத்தில், சர்வதேச சூரிய மின் சக்தி கூட்டணியுடன் உலகவங்கி நேற்று ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது. இந்த உடன்பாடு, மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, மின்சாரமந்திரி பியுஷ் கோயல், உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத் திடப்பட்டது.
அப்போது சூரிய மின் சக்தி விரிவாக்கம் என்னும் இந்தியாவின் லட்சிய முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிற வகையில், உலகவங்கி 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6,700 கோடி) நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது.
இந்த நிதியானது, உலகவங்கியின் ஆதரவுடன் செயல்படுத்துகிற கூரையில் சூரிய மின்த கடுகள் பொருத்தி சூரிய மின் சக்தி உற்பத்தி செய்தல், சூரிய மின்சக்தி பூங்காக் களுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், புதுமையான சூரிய மற்றும் கலப்பு ரக மின் உற்பத்தி தொழில் நுட்பங்களை சந்தைக்கு கொண்டு வருதல், சூரிய மின் சக்தியை அதிகமாக உற்பத்தி செய்கிற மாநிலங்களுக்கு தடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்கு பயன் படுத்தப்படும் என உலகவங்கி கூறி உள்ளது.
வினியோக கட்டமைப்புடன், கூரைகளில் சூரியமின்சக்தி பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிற திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசும், உலகவங்கியும் 625 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,187 கோடியே 50 லட்சம்) மதிப்பிலான ஒப்பந் தத்தில் கையெழுத்திட்டன.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை உலகவங்கி தலைவர் ஜிம்யாங் கிம் சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவில் தொழில்தொடங்கும் நடைமுறைகளை (குறிப்பாக தளவாட துறையில்) எளிமைப் படுத்தி, அபாரமாக முன்னேற்றம் கண்டு இருப்பதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார்.
உலக வங்கியுடன் இந்தியாவின் தொடர்புகளை மேலும் அதிகரிப் பதற்கான வழிமுறைகள் பற்றி இருவரும் விவாதித்தனர். இந்தியாவும், உலக வங்கியும் எந்தெந்த துறைகளில் ஒத்துழைப்பு வழங்கமுடியும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தினர்.
பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு, சுற்றுச் சூழலுக்கு உகந்த பாதையை தேர்வுசெய்து பின்பற்றுவதற்கு போதுமான நிதிவழங்க வேண்டியதன் தேவை குறித்தும் உலகவங்கி தலைவர் ஜிம் யாங் கிம்மிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஸ்மார்ட் நகரங்கள், கங்கை நதியை சுத்திகரிக்கும் திட்டம், திறன்மேம்பாடு, தூய்மை இந்தியா, அனைவருக்கும் மின்சாரம் போன்ற திட்டங்களில் உலகவங்கி தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதற்கு உலகவங்கி தலைவர் ஜிம் யாங் கிம்மிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.