இந்தியா மிகப் பெரிய, பன்முகத் தன்மை கொண்ட நாடு, எனவே அதற்கு ஏற்ப 78 அமைச்சர்கள் இருப்பது பெரியவிஷயமல்ல என்று மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல்பொறுப்பாக இருந்து தகவல், ஒலிபரப்புத் துறை வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தில்லியில் அமைச்சக கூடுதல்பொறுப்பை புதன்கிழமை ஏற்றுக்கொண்ட பிறகு அருண் ஜேட்லியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கய்யநாயுடு கூறியதாவது:
மத்திய அமைச்சரவை மாற்றத்துக்கு மக்களிடம்இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த சிலதலைவர்கள் கூட இதனை வரவேற்றுள்ளனர். மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர்வரை அமைச்சர்களாக நியமிக்க அரசமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது.
இந்தியா மிகப் பெரிய நாடு மட்டுமல்ல, பன்முகத்தன்மை நிறைந்தநாடு. இங்குள்ள பிரச்னைகளுக்கு ஏற்ப மத்திய அரசு அதிக அளவு உழைக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய அரசில் 78 அமைச்சர்கள் இருப்பது என்பது அதிகமான எண்ணிக் கையல்ல. மக்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும் வகையில் அரசு செயல்படவேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கான திட்டங்களை நிறைவேற்ற முழுமையான ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. எனவே தான், புதிதாக பல அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது என்பது பிரதமரின் தனிப்பட்ட உரிமை. துறைமாற்றத்தால் யாருக்கும் மனவருத்தம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு தெரியவில்லை. நாட்டுமக்களின் நம்பிக்கையாக பிரதமர் உள்ளார். நீண்ட நாள்களுக்குப் பிறகு நிலையான அரசு, வலுவான தலைமையும் நாட்டுக்கு கிடைத்துள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.