ஜல்லிகட்டு நடைபெறுவதற்கான ஒரு புதிய சட்டத்தை ஏற்கனவே இருக்கும் தடையை நீக்கும் அளவிற்கு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்த மசோதா மழை கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே சென்ற பொங்கலுக்கே ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்றும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு என்பது வீரவிளையாட்டு என்பதை அங்கீகரித்து மத்திய அரசு ஒரு சட்ட அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால் விலங்கின வாரியத்தை சார்ந்தவர்களும் மற்றும் பலரும் அதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை ஏற்படுத்திவிட்டார்கள். ஆக மத்திய அரசு தமிழர்களுக்கான வீரவிளையாட்டு நடைபெற வேண்டும் என்றும் ஜல்லிகட்டு தடை நீங்கி நிரந்தரமாக நடைபெற வேண்டும் என்றும் இந்த ஒரு சட்ட திருத்தத்தையே கொண்டு வந்து அதன் மூலம் ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு சட்ட அமைச்சகம், சட்ட திருத்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் Prevention of cruelty at 1960ல் என்ற சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து ஜல்லிகட்டு என்பது விலங்கு வதை கிடையாது அது ஒரு வீரவிளையாட்டு, அது ஒரு கலாச்சார விளையாட்டு என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.
இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பொழுதே நமது அடுத்த பொங்கல் ஜல்லிகட்டோடு நடைபெறுவதற்கு மத்திய அரசு வழிவகைச் செய்திருக்கிறது. ஏற்கனவே ஜல்லிகட்டுக்கு தடை விதித்த வழக்கு, ஆகஸ்டு 1-ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் வர இருக்கின்ற நிலையில் இன்று இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்து மழை கால கூட்டத் தொடரில் இந்த புதிய மசோதாவை நிறைவேற்றுவதற்கான வழிவகை செய்திருக்கும் மத்திய அரசுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய மோடி தலைமையிலான அரசு உண்மையாக மதிப்பளிக்கிறது என்பதும் தமிழ் கலாச்சாரத்திற்கு பிரதமர் அவர்கள் துணை நிற்கிறார் என்பது தெளிவாகிறது. கட்சி எல்லை கடந்து நம் பாரத பிரமருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது.
அதே போல Madras high court என்பதை சென்னை உயர்நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்தது தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் மீது அக்கறையும், பாசமும் கொண்டது மத்திய அரசு என்றும், நம் மாநிலத்திலிருந்து வைக்கும் கோரிக்கைகளை நியாயத்துடன் பரிசிலிக்கும் அரசாக மத்திய அரசு திகழ்கிறது என்பது நிருபணமாகிறது. இதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
நன்றி டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மாநிலத் தலைவர்
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.