ஜாகிர் நாயக் என்ற இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய மத போதகரின் பயங்கரவாதத்தைத் தூண்டும் பேச்சுக்களால் நமது அண்டை நாடான பங்களாதேஷில் கடந்த வாரம் நடைபெற்ற இரு வேறு சம்பவங்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
சௌதி அரேபியா, யுனைட்டட் அராப் எமிரேட்ஸ் போன்ற பல்வேறு அந்நிய நாடுகளில் இருந்து 'இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன்' (Islamic Research Foundation – IRF) என்ற இவரது அமைப்பிற்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை நன்கொடையாகப் பெற்றிருக்கிறார்.
இந்த FCRA முறைகேடுகள் குறித்து 2008-இல் புனே நகரத்தின் முன்னாள் போலீஸ் கமிஷனர் டாக்டர் சத்யபால் சிங் (பாக்பட் தொகுதியின் தற்போதைய பாஜக எம்பி) கொடுத்த புகார்களை மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி தர இப்படிப்பட்ட பயங்கரவாதப் பின்னணி உள்ள ஒருவரை அழைத்தட்து அந்தக் கட்சிக்கு நாட்டு நலனில் எந்தவிதமான அக்கறை இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஆனால் இப்போது இவரது வன்முறையைத் தூண்டுகின்ற மதவெறிப் பேச்சுக்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. பயங்கரவாதத்தை ஊக்குவித்த காரணத்தால் இப்போது பங்களாதேஷிலும், ஏற்கனவே நம் நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ள இவரது டி.வி சேனலுக்கு 'Peace TV' என்று பெயர். அமெரிக்கா, கனடா நாடுகளில் இவர் நுழைய முடியாத படி தடை உள்ளது.
ஒரு வன்முறைவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா! ஆனால் இந்த நேரத்தில் தமிழகத்தின் வன்முறை இயக்கமான மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது ஜாகிருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராகப் போரோடுவோம் என அறிவித்திருப்பது முழுக்க முழுக்க அவரது தேச விரோத, மிரட்டல் போக்கை வெளிப்படுத்துகிறது.
இவரது கட்சியினர் ஆம்பூரில் நடத்திய அருவறுக்கத்தக்க வன்முறையைப் பார்த்த பிறகு விழித்துக் கொண்ட தமிழக மக்கள் நடந்து முடிந்த தேர்தலிலே அந்தக் கட்சியை முழுவதுமாகப் புறக்கணித்து இருக்கிறார்கள்.
இவரே சொல்கிறார். ஜாகிருடைய சில பேச்சுகள் முரண்பட்டதாக இருக்கலாம் என்று. முரணாகப் பேசுவதே தேச விரோதம் தானே! இவரைப் போன்ற ஊளை மிரட்டல்களைக் கண்டு மத்திய அரசு பயந்து விடாது.
ஆகவே ஜாகிர் நாயக்கினுடைய இந்த வன்முறையைப் பேச்சுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை தேசபக்தியுள்ள, அமைதியை விரும்புகின்ற ஒவ்வொரு குடிமகனும் வரவேற்க வேண்டும். ஆதரிக்க வேண்டும்.
மேலும் கடந்த ரம்ஜான் மாதத்தில் மட்டும் உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதை இவ்விடத்திலே நான் நினைவு கூற விரும்புகிறேன்.
அதோடு மட்டுமல்ல, இஸ்லாமின் பெயரால் வன்முறையை, பயங்கரவாதத்தை ஆதரிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு விடும் என்பதை முகமது நபி அவர்கள் தொழுகை செய்த மெதீனா பள்ளிவாசல் முன்பு நடந்திருக்கின்ற வெடிகுண்டு சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
எனவே அமைதியை விரும்புகின்ற முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் உடனடியாக ஜாகிர் நாயக் போன்று, ஜவாஹிருல்லாவைப் போன்று இஸ்லாமிய பயங்கரவாதத்திற்குத் துணை போகிறவர்களுக்கு எதிராக வெளிப்படையாகக் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
வன்முறையின் காரணமாக எதையும் சாதித்துவிட முடியாது. இறைவனே இருக்கின்ற இடமும் வன்முறைவாதிகளுக்குப் புனிதமானது அல்ல என்பதையே மெதீனாவில் நடந்த சம்பவம் சுட்டிக்க்காட்டுகிறது. இதை நாம் மறந்துவிடக் கூடாது.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.