தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது

காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகுறித்து விவாதிக்க நாளை (12-ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநிலங் களவையில் நேற்று தெரிவித்தார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹில்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து கடந்த 33 நாட் களாக நடந்துவரும் கல்வீச்சு போராட்டங்கள், வன்முறை காரணமாக இது வரை 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கவேண்டும் என நேற்று முன்தினம் மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனை அரசு ஏற்றுக் கொண்டது.நேற்று இதுதொடர்பான விவாதம் மாநிலங்களவை பூஜ்ஜியநேரத்தில் எடுத்து கொள்ளப்பட் டது. சுமார் 6 மணிநேரம் இது தொடர்பான விவாதம் நடந்தது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப்பேசிய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், “காஷ்மீரை ராணுவத்தின் வசம் ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறையால் 4515 பாதுகாப்பு படையினரும், 3,356 குடிமக்களும் காயமடைந்துள்ளனர். காஷ்மீரில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் அனைத்தும் பாகிஸ்தானால் தூண்டப் பட்டவை. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் அங்குள்ள மக்களை கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் தூண்டிவிட்டு வருகின்றனர்.

காஷ்மீருக்கு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் அடங்கியகுழு அனுப்பி வைக்கப்படும். வரும் வெள்ளிக்கிழமை இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும். இதில் பிரதமர் மோடி பங்கேற்பார். தேச பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை இந்திய மண்ணில் அனுமதிக்க முடியாது. எந்தவொரு சக்தியாலும் காஷ்மீரை நம்மிடமிருந்து பறிக்கமுடியாது” என்றார்.

இறுதியில், “காஷ்மீர் பள்ளத் தாக்கில் தொடர்ந்து நீடிக்கும் கொந்தளிப்பான நிலை, வன்முறை, ஊரடங்கு உத்தரவு ஆகியவை தொடர்பாக இந்த அவை மிகுந்த கவலை கொண்டுள்ளது” என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...