ரியோ ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்று உள்ள இந்திய வீரர்கள் தோல்விகளைகண்டு துவண்டுவிட வேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி ஆறுதல் கூறிஉள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியஅணியின் செயல்பாடு தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துவருகிறது. இந்திய அணிவீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ரியோ ஒலிம்பிக்போட்டியில் இந்தியா ஒருபதக்கம் கூட வாங்கவில்லை என்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினப்பேருரையில் பிரதமர் நரேந்திர மோடி ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு ஊக்கமளித்து பேச வேண்டும் என்று கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட தகவலில், ”ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து இந்தியவீரர்களின் கடின உழைப்பையும் எண்ணி தேசம் பெருமையடைகிறது… வெற்றியும், தோல்வியும் வாழ்வின் ஒருஅங்கம், அதனைப் பற்றி வீரர்கள் கவலைப்பட வேண்டாம்,” என்று கூறி உள்ளார்.
அடுத்த டுவிட்செய்தியில், இனிவரும் போட்டிகளில் பங்கேற்கும்வீரர்கள் முடிவைப் பற்றி கவலைப்படாமல் முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாட பிரதமர் மோடி வீரர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரின் பொறுமை, அர்ப்பணிப்பு உணர்வு, உறுதி ஆகியவை நம்மை பெருமை யடைய செய்கிறது. அவர்கள் இந்தியாவின்பெருமை என்று பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.