மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் ;மத்திய அரசு

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளநிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் என்று மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. 
 
மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி பேசுகையில், “கர்நாடக மாநில தலைமை செயலாளருடன் தொடர்பில் உள்ளேன் மற்றும் கர்நாடக கோரும் உதவி எதுவாகினும் வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டு உள்ளார். 
 
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. 
 
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் கடந்த 6-ந்தேதி இரவு முதல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டது. 
 
இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ”செப்டம்பர் 20-ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும்'' என்று இன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து பெங்களூருவில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் வாகனங்களை அடித்து நொறுக்கிஉள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.  தமிழர்களின் கடைகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.  
 
பெங்களூரு, மைசூர் மற்றும் மாண்டியாவில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு சிட்டியில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்புபணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வன்முறை தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...