இந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய பிரதமராக தொடர்ந்துபணியாற்ற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்

தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 

வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-ஏழைதாய்க்கு மகனாக பிறந்து இந்திய நாட்டின் பிரதமராக வளர்ந்து உலக தலைவராக உயர்ந்து நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் 66-வது பிறந்தநாளில் அவர் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இந்திய நாட்டை உலகின் முதன்மை நாடாக உயர்த்திய பிரதமராக தொடர்ந்துபணியாற்ற அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.

 
தமிழக நலனில் அக்கறைக் கொண்டு இலங்கையில் தமிழக மீனவர்கள் தூக்குகயிறை முத்தமிடும் வேளையில் மீட்டுவந்து தமிழகத்துக்கு தந்தவர். தமிழகம் முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கீடுசெய்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளை ‘ஸ்மார்ட் சிட்டி’களாகவும், நகராட்சிகளை ‘அம்ருத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்துவதற்கான உரிய ஒதுக்கீடுசெய்து தந்தவரும் நமது பிரதமர்.
 
 
முல்லைப் பெரியாறு ஆகட்டும், காவிரி நதிநீர் ஆகட்டும், நியாயத்தோடு நின்று வழிநடத்தி வருபவர் பிரதமர் மோடி. தமிழகத்தின் வளர்ச்சிக்காக குமரிமாவட்டம் இனையம் பகுதியில் ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கவும் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு வீடுகட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான பாரதத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர்.
 
மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு இரண்டே ஆண்டுகளில் ‘ஜன் தன் யோஜனா’, ‘அடல்’ ஓய்வூதிய திட்டம், ‘உஸ்தாத்’ திட்டம், இந்திய மீனவர்கள் நலன்காக்கும் திட்டம், ‘முத்ராவங்கி’ திட்டம், ‘செல்வமகள்’ திட்டம், ‘தீனதயாள் உபாத்யாயா’ ஊரக மின்வசதி திட்டம், ‘ஜீவன் ஜோதி’ ஆயுள் காப்பீடு திட்டம், ‘ஜீவன் சுரக்‌ஷா பீமா’ விபத்து காப்பீடு திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்த ஒரேபிரதமர் நமது நரேந்திர மோடி என்பதை அனைவரும் அறிவார்கள். அன்னாருக்கு 66-வது பிறந்த நாள் வாழ்த்துகளை எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...