ஜம்முகாஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள ராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் நீண்டகால போரை தொடுத்திருக்கிறது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பாஜக தேசியக்கவுன்சில் கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றி அமித் ஷா பேசியதாவது:
உரிபகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியாக செயல் பட்ட சதிகாரர்களுக்கு எதிராக மக்கள் கோபத்தில் இருப்பதை பாஜக உணர்கிறது. காஷ்மீர் எல்லைவழியாக இந்தியாவுக்குள் கடந்த 8 மாதங்களாக நடைபெற இருந்த 17 ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப்படையினர் முறியடித் துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே உரிபகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இதன் மூலம் இந்தியா மீது நீண்ட கால போரை பாகிஸ்தான் தொடுத்திருக்கிறது. எனினும், போரின்முடிவில் இந்தியாவே வெற்றிபெறும். பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கையை பாஜகவும், மத்திய அரசும் ஆரம்பத்தி லிருந்தே கடைபிடித்து வருகிறது. உரிபகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சரியானபதிலடி கொடுக்கப்படும். கடந்த 8 மாதங்களில் 117 பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக சண்டை யிடுவதற்கான யுக்தியை மத்திய அரசு தொடங்கிவிட்டது. பாகிஸ்தானின் ஆதரவைப்பெற்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்கபதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என்று காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அமித் ஷா மறைமுகமாக பதிலடி கொடுத்தார். காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரிவினைவாதிகள் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தேசியக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.