காந்தி ஜெயந்தி தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் பாரதிய ஜனதா மும்முரமாக செயல்படுத்தி வருகிறது .
புனேவில் நடைபெற்ற தூய்மை இந்தியாதிட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாரதிய ஜனதா கட்சியினருடன் இணைந்து தூய்மைப்பணிகளை மேற்கொண்டார். பின்னர் பேசியவர், இந்தியா -பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவிவருவதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேபோல் டெல்லியில் தூய்மை இந்தியா திட்டத்திற்கான பேரணியை மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு தொடங்கிவைத்தார். அப்போது பேசியவர், நாட்டின் விடுதலைக்காக போராடிய நாம், இன்று தூய்மைக்காக போராடிவருவதாக குறிப்பிட்டார்.
தூய்மை இந்தியா திட்டம், சுதந்திரப் போராட்டத்தைவிட வலிமையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, பசுமையான நாடாக இந்தியாவை மாற்றவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று தெரிவித்தார்.
டெல்லியின் ராஃபிமார்க் பகுதியில் கட்டப்பட்ட நவீன பொதுக்கழிப்பிட வளாகத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.