ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100 பயங்கரவாதிகள் தயார் நிலையில்

எல்லை கட்டுப்பாட்டுக்கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கு 100 பயங்கர வாதிகளை பாகிஸ்தான் ராணுவம் தயார்படுத்தி யிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய ராணுவத்தினர் கடந்த 29-ஆம் தேதி நடத்திய அதிரடிதாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவம் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


பாதுகாப்பு விவகாரங் களுக்கான அமைச்சரவை கூட்டம், தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு பதிலடிகொடுக்கும் வகையில், ஜம்மு-காஷமீர் மாநிலத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக, பத்துக்கும்மேற்பட்ட பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் ராணுவம் தயார்நிலையில் வைத்திருப்பதாக, மத்திய அமைச்சர்களிடம் அஜித்தோவால் கூறினார்.


உளவுத் துறை அளித்திருக்கும் அந்தத் தகவல்படி, காஷ்மீருக்குள் சுமார் 100 பயங்கரவாதிகளை ஊடுருவச்செய்து, அங்குள்ள பாதுகாப்பு மற்றும் ராணுவமுகாம்கள் மீதும், குறிப்பிட்ட சில பொது இடங்கள் மீதும் தாக்குதல் நடத்துமாறு அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அறிவுறுத்தியிருப்பதாகவும் அஜித்தோவால் கூறினார்.
அதையடுத்து, எல்லை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப் படுத்தியுள்ளது. மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுகோய் ரக போர்விமானத்தை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...