காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதும் எல்லையில் ‘சர்ஜிகல் ஆப்ரேஷன்’ முன்னெடுக்கப் பட்டது என்று கூறப்படுவதை மனோகர் பாரிக்கர் நிராகரித்தார்.
மும்பையில் நடைபெற்ற இருவெவ்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியராணுவம் நடத்திய ஆப்ரேஷனுக்கான பெயரும், புகழும் சந்தேகப்படுபவர்கள் உள்பட இந்தியாவில் உள்ள 127 கோடிமக்கள் மற்றும் இந்திய ராணுவத்தையே சாரும் . எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராது. புகழின் அதிக பங்கானது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசைசேரும் திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலுக்கு என்று மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டும் தெரிவித்துவருகின்றனர், மேலும் அரசிடம் ஆதாரமும் கோரிவருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் ‘சர்ஜிகல் ஆப்ரேஷன்’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது ஆனால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதும் இதுபோன்ற தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறிவருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதும் எல்லையில் ‘சர்ஜிகல் ஆப்ரேஷன்’ முன்னெடுக்கப்பட்டது என்று கூறப்படுவதை மனோகர் பாரிக்கர் நிராகரித்தார்.
”நான் கடந்த இரண்டுவருடங்களாக பாதுகாப்பு மந்திரியாக உள்ளேன். எனக்கு தெரிந்தவரையில் கடந்த வருடங்களில் எந்த ஒரு ‘சர்ஜிகல் ஆப்ரேஷனும்’ முன்னெடுக்கப் படவில்லை. எல்லைப் பாதுகாப்பு படையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று எதனை அவர்கள் குறிப்பிட்டார்களோ, அவை அனைத்தும் உலகம் முழுவதும் செயல் பாட்டில் உள்ளது, இந்திய ராணுவமும் நடவடிக்கையை எடுத்தது,” என்று மனோகர் பாரிக்கர் கூறி உள்ளார். இதுபோன்ற தாக்குதல் தொடர்பான நடமுறையை விளக்கிய மனோகர் பாரிக்கர், இது யாருக்கும் தெரியாமல் நடத்தப்பட்டது. பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நடவடிக் கையானது பாதுகாப்பை உறுதிசெய்ய அப்பகுதி கமாண்டரால் முன்னெடுக்கப்பட்டது என்று மனோகர் பாரிக்கர் பேசி உள்ளார்.ஆனால், இம்முறை அப்படி கிடையாது, சர்ஜிகல் ஆப்ரேஷன் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு பின்னர் ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராணுவம் வெற்றிகரமாக ஆப்ரேஷனை முடித்தது என்று பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.