அரசு வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஓய்வுபெற்ற பிறகும் அரசு வாகனங்களைப் பயன் படுத்தி வரும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அவற்றை ஒப் படைக்கா  விட்டால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் மத்தியபோலீஸ் அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒருகடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஓய்வு பெற்ற பிறகும் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்கள் வீடுகளில் பாதுகாவலர்கள் உட்பட ஏராளமான காவலர்களைப் பணியில் (சொந்த) ஈடுபடுத்தி வருவதாக புகார்எழுந்துள்ளது. இதுபோல, பல ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் அரசு வாகனங்களை பயன் படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இது போன்ற செயல் பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அடிப்படை ஒழுக்கம் மற்றும் அரசுப்பணி ஒழுக்கத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு விரும்புகிறது.

எனவே, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இது போன்ற சலுகைகளை ஒரு மாதத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இதை மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ்/மத்திய போலீஸ்துறை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை மதிக்காத ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள்மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பணியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...