சர்வகட்சி கூட்டமா? திமுக கூட்டணிக் கட்சிகள் கூட்டமா?

காவிரிவிவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க திமுக நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்தகூட்டத்தில் பாஜக கலந்து கொள்ள வில்லை. இந்நிலையில் இந்த கூட்டம் ஒரு நாடகம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியிருந்தார்.

இதனையடுத்து அனைத்துகட்சி கூட்டம் முடிந்தபின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடந்தது சர்வகட்சி கூட்டமா? திமுக கூட்டணிக் கட்சிகள் அல்லது அந்தக் கூட்டணியில் சேரத்துடிப்பவர்களைத் தவிர யாரும் பங்கேற்கவில்லையே. எனவே இந்தக்கூட்டத்தால் விவசாயிகளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தபலன் கிடைக்கப் போவதில்லை.
 
காங்கிரஸும், திமுகவும் கடந்த 40 வருடமாக பொறுப்பில் இருந்திருக்கிறது. காவிரிப்பிரச்னையில் என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பதை பட்டவர்த் தனமாக தமிழக மக்களுக்குத் தெரிவியுங்கள். அதனால் தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியிருக்கிறேன்.
 
பழையதைமறந்து, இப்போதாவது எல்லா கட்சிகளும் ஒருங்கிணையலாமே என்கிறார்கள். முதலில், இதுவரை செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அதன்பிறகு யோசிப்போம். இத்தனை ஆண்டு காலம் நடந்த சீரழிவுக்கு யார்காரணமோ அந்தக் காங்கிரஸை அருகில் வைத்திருக்கிறார். இதுவரை நடந்த தவறுகளுக்கும் துரோகங் களுக்கும் காங்கிரஸ் துணையாக இருந்தது. இப்போதும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுதான் உள்ளது.
 
கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தவர். 12 மத்தியமந்திரிகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் இந்தப் பிரச்னையை கண்டுகொள்ள வில்லை. மீண்டும், இப்போது அவர்களை நம்பி போலியான நம்பிக்கையை தமிழகமக்களுக்குக் கொடுக்க வேண்டுமா? அதற்கு எல்லாக்கட்சிகளும் துணைபோக வேண்டுமா? அரசாங்கம் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டியிருந்தால் எல்லோரும் கலந்துகொண்டிருப்பார்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருப்பார்கள் என பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...