சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்தபேட்டி: தமிழகத்தில் பணத்திற்கு வாக்களிக்கும் அவமானத்திற்கு விடிவு காலம் ஏற்படும்வகையில் நடைபெற இருக்கும் 3 இடைத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் இந்தமாற்றத்தை உருவாக்க வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கமாட்டோம். வாக்கிற்கு பணம் தர அனுமதிக்கமாட்டோம் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும்.
வாக்கிற்கு பணம்தருபவர்கள் 2 சட்டப்பேரவை, 2 மக்களவை தேர்தல்களில் போட்டியிடும் தகுதி அற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும். அதேபோல, வாக்கிற்கு பணம் வாங்குபவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதவகையில் 3 மாத சிறை தண்டனை வழங்க வேண்டும். காவிரி பிரச்னையில் திமுக அரசு, மத்தியகாங்கிரஸ் அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறுவாணி அணை பிரச்னையில் மத்திய அரசு செயல்பட்டவிதத்தை பாராட்டாமல் விமர்சனம் செய்வது ஏற்கத்தக்கது அல்ல.
புதுச்சேரியில் அதிமுக வேட்பாளரை பாஜ ஆதரிக்கும் முடிவு அந்தமாநில நலன்சார்ந்த விஷயம். இது பொது தேர்தல்அல்ல. அந்த மாநில சூழ்நிலை அடிப்படையில் புதுச்சேரிமாநில பாஜ இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழக விவசாயம், தொழில் வளர்ச்சிக்கு உதவ மத்தியஅரசு தயாராக இருக்கிறது. அந்தநிலை வரும்போது தாழ்ந்த நிலை உயரும். மனித உரிமை, மற்ற உரிமைகள் பற்றிபேசுபவர்கள் குஷ்பு கூறிய கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். கோடிக் கணக்கான பெண்களின் குமுறல் இது. ஒருசட்டத்தை கூறி உரிமையை பறிப்பதை ஏற்க முடியுமா? இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.