இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே 6 ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு, அணுசக்தி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திரமோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கையெழுத்திட்டனர். அணுஆயுத பரவல் தடைசட்டத்தில் கையெழுத்திடாத ஒரு நாட்டுடன் இத்தகைய ஒப்பந்தத்தை ஜப்பான் செய்துகொள்வது இதுவே முதல்முறை.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ஜப்பான் சென்றடைந்த அவருக்கு சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நிகழ்ச்சி நிரலில் இல்லாத அம்சமாக பிரதமர் மோடி, ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து பேசினார். ஜப்பான் மன்னர் வெளிநாட்டு தலைவர்களை அவ்வளவு எளிதாக சந்திப் பதில்லை என்பதால் அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசியநிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தசந்திப்பில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பழமை வாய்ந்த, பல்லாண்டுகால தொடர்புகளை பற்றியும், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளின் எதிர்காலம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்தியா-ஜப்பான் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, இந்தியாவில் முதலீடுசெய்ய ஜப்பான் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, டோக்கியோவில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சந்திப்பு நடந்தது. இதில், வரலாற்றுசிறப்புமிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி, அபே இருவரும் ஒப்பந்தம் அடங்கிய கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம்தொடர்பாக இந்தியா, ஜப்பான் இடையே கடந்த 6 ஆண்டுகாலமாக பேச்சு வார்த்தை நடந்துவந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அபேயின் இந்திய பயணத்தின்போது, அணு சக்தி தொடர்பாக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெறப்படும் அணு சக்தியை ஆக்கப்பூர்வ பயன் பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அணு ஆயுதசோதனைக்காக பயன்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஜப்பான் விதித்துள்ளது. இதுதொடர்பான சில தொழில்நுட்ப நடைமுறைகள் முடிவானதை தொடர்ந்து, நேற்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அணு சக்தி துறையில் மிகமுக்கிய நாடாக ஜப்பான் திகழ்ந்து வருகிறது. அந்நாடு, அணு ஆயுதபரவல் தடைசட்டத்தில் கையெழுத்திடாத ஒருநாட்டுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இது குறித்து பிரதமர் மோடி, அபேயுடன் கூட்டாக அளித்தபேட்டியில் கூறியதாவது:இது ஒருவரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம். மேலும், இத்துறையில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல் படுவது, பருவகால மாற்றத்தை சமாளிக்கவும் உதவும். அணு எரிபொருள் விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு ஆதரவுதந்ததற்காக பிரதமர் அபேக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தீவிரவாதத்துக்கு எதிராகவும், குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் இருநாடுகளும் இணைந்து செயல்படும். உற்பத்தி, முதலீடு மற்றும் 21ம் நூற்றாண்டு அறிவார்ந்த தொழிற் சாலைகள் கொண்ட முக்கிய மையமாக வளர்ச்சி அடைவதே இந்தியாவின் இலக்கு. இந்தபயணத்தில், ஜப்பான் நமது இயற்கையான சகோதர நாடாகும். இவ்வாறு அவர் கூறினார்.அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஜப்பான், அணு சக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு சப்ளைசெய்யும். இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க துணைபுரியும். அணு சக்தி ஒப்பந்தம் உள்பட மோடி-அபே சந்திப்பில் விண்வெளி, வேளாண் உள்ளிட்ட 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மும்பை புல்லட்ரயில் அடுத்த ஆண்டு பூமிபூஜை ஜப்பானுடன் மத்திய அரசு இணைந்து இந்தியாவில் முதல் முறையாக மும்பை-அகமதாபாத் இடையே புல்லட்ரயில் கொண்டுவர உள்ளது. இதுதொடர்பாக, மோடி-அபே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அடுத்தமாதம் மும்பை புல்லட் ரயில் திட்டத்துக்கான ஆலோசனை பணிகள் நடத்துவதென்றும், அடுத்தாண்டு பூமிபூஜை செய்வதென்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு இறுதியில் கட்டுமானபணிகள் தொடங்கப்படும். 2023ம் ஆண்டு புல்லட்ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதென, மோடி-அபே கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.