தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டணம் 24ம் தேதி வரை ரத்து

புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடுமுழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டண ரத்து சலுகைவரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக , புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 8-ஆம் தேதி இரவு அதிரடியாக அறிவித்தார். இதனால் உண்டான குழப்பமான சூழல்காரணமாக நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி 9-ம் தேதி அன்று இரவு அறிவித்தார்.

தொடர்ந்தும் பணநோட்டுகள் புழக்கத்தில் நிலவிய சிக்கல்காரணமாக இந்த சலுகையானது பின்னர் ர் நவம்பர் 14 மற்றும் நவம்பர் 18 என அடுத்தடுத்து இரூமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்தசலுகை நாளை நள்ளிரவு 12 மணியுடன் முடிய உள்ள நிலையில், நிலைமை சீரடைய மேலும் சில நாட்கள் தேவைப்படும் காரணத்தால் இந்த சுங்ககட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  தில்லியில் இன்று மத்திய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடுமுழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால்  நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்ககட்டண ரத்து சலுகை வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...