இடைத்தேர்தல் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது. அதனாலேயே இடைத்தேர்தல்களை சந்திப்பதற்கு பல கட்சிகள் தயங்குகின்றன. களங்கம் இருக்கிறது என்பதற்காக களம் இறங்கத்தயங்கினால் களங்கத்தையும் போக்க முடியாது, கழகங்களையும் மாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழக பாரதிய ஜனதா கட்சி மூன்று தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது. தமிழக மக்கள் இந்த முறை ஓர் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் இரண்டு திராவிடக்கட்சிகளும் தான் வெற்றி பெற்றன. போதுமான அளவிற்கு 89 பேர் திமுகவில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றார்கள். ஆனால் கடந்த 3 மாதமாக சட்டமன்ற நடவடிக்கைகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் உற்று நோக்கினால் அவர்கள் பெற்ற வெற்றியில் எந்த பலனுமில்லை. வெளிநடப்புதான் அதிகரித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல சட்டமன்ற வெளியிலும் நாடகங்கள் நடந்தன. ஆக வெளிநடப்பு செய்வதற்கு இன்னும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமா? அது மட்டுமல்ல அதிமுக உறுப்பினர்களை மேசையைத்தான் அதிகம் தட்டுகிறார்கள். ஆக மேசையை தட்ட கூடுதல் உறுப்பினர்கள் தேவையா? அதற்காக ஓர் மாற்றத்திற்காக மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்;. தமிழகம் 67ல் இருந்து இன்று வரை வளர வேண்டிய அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறதா என்றால் இல்லை. பல திட்டங்கள் அவ்வப்போது மக்களை திருப்திப்படுத்த தற்காலிக பலனை மக்களுக்கு கொடுக்க திட்டங்களை அளித்திருக்கிறார்களே தவிர நிரந்தரமாக மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை.
தமிழகத்தில் நதி நீர்ப் பிரச்சனைக்கும், அதன் மூலம் விவசாயிகளின் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வை ஏற்படுத்த ஏதாவது திட்டங்களையோ, முயற்சியையோ மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லை. இன்று நிரந்தரமாக தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய காவிரிப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகள் முடிவிற்கு வராமல் இருப்பதற்கும் அவர்களே காரணம்.
எத்தனை தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன? எவ்வளவு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன? எல்லாவற்றிற்கும் மேலாக ஊழல் நிறைந்த தமிழகமாக இன்று இருப்பதற்கு ஆண்ட ஆளும் கட்சிகள் தான் காரணம். மருத்துவமனைகளின் தரம் எப்படி இருக்கிறது. தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இன்று எப்படி இருக்கிறது. வேலை வாய்ப்பு எப்படி இருக்கிறது. கட்டமைப்பு எப்படி இருக்கிறது. கட்சிகளாக அவர்கள் பலம் பெற்றிருக்கிறார் என்ற ஒற்றைக் காரணத்தினால் மட்டும் மக்கள் பலம் இழந்தவர்களாகவே இருக்கக்கூடாது. மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதி நிச்சயம் தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும். ஆக ஓர் நேர்மையான, வெளிப்படையான அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து தமிழக அரசியலில் ஓர் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் மக்கள்;; பணியில்
Dr. தமிழிசை சௌந்தரராஜன்
You must be logged in to post a comment.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
tamil naattil manila katchikalin aathikkam,poeikalai nampum makkal kuttam evaikal erukkum pothu bjp vetriperamudiyathu. ennum 15 varutangal modi prathamara erunthal thamilakatthil bjp aatchikku varaum.