தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ராஜ்ய சபா அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று நலம் விசாரித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெற்று வருகிறார். மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அண்மையில் ஜெயலலிதா அவசரசிகிச்சை பிரிவில் இருந்து தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறி அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் இன்று ராஜ்யசபா அதிமுக எம்பிக்கள் நவநீத கிருஷ்ணன் மற்றும் மைத்ரேயனிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்திருக்கிறார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா நலமடைந்துவருவதாக அதிமுக எம்பிக்கள் கூறியுள்ளனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா போர்க் குணம் மிக்கவர் எனவும் இச்சந்திப்பின் போது மோடி புகழாரம் சூட்டியதாக அதிமுக எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.