பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது

பாஜக.,வின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

பாஜக மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் வர்தா புயல் பாதிப்பை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

புயல்காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருலட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதற்கு மாற்றாக பாஜகசார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். ஜல்லிக் கட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் அழுத்தமான வாதத்தை முன்வைத்துள்ளது. ஆகவே கோர்ட்டில் சாதகமான தீர்ப்புவரும் என எதிர்பார்க்கலாம்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க் கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதேநேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் கவனிக்கவேண்டும். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது. பாஜகவின் ஆன்மீககொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது. இருப்பினும், கொள்கை அடிப்படையில் அக்கட்சியோடு கூட்டணிவைப்பது குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...