உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் பாஜ தேசிய செயற்குழுகூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தேர்தல்வியூகம், கரன்சி வாபஸ் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் படுகிறது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம், கருப்பு பணம் வெளி வருவதுடன், கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பா.ஜ. கட்சியின் தேசியசெயற்குழு 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. டெல்லி மாநகராட்சி சமுதாயகூட்ட அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை, கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். கரன்சி வாபஸ் விவகாரம், ஊழல் ஒழிப்பு, ரொக்கமில்லா பரிவர் த்தனை, ஏழை எளியவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை அவர்களுக்கு கொண்டுசேர்ப்பது உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், சண்டிகரில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் பாஜ வெற்றியை பாராட்டியும், கருப்புபணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு, தேர்தல் வியூகம் போன்றவை குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப் படுகிறது. 5 மாநில தேர்தல் நடைபெறும் நிலையில் தேசியசெயற்குழு கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் நாளைமாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள், கட்சியின் முக்கியநிர்வாகிகள், தலைவர்கள், தேசியசெயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.