எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான்

தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொங்கல்விழா நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டு பொங்கலிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்குபிறகு டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு வழக்கில் பொங்கலுக்கு முன்பு தீர்ப்புவழங்க இயலாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்து உள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தவிவகாரம் மத்திய அரசின் கைகளில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் கைகளில்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணை சுப்ரீம்கோர்ட்டால் நிராகரிக்கப்பட்டது. தற்போது அவசரசட்டம் கொண்டு வந்தாலும் அதே நிலைதான் வரும். அவசரசட்டம் கொண்டு வருவதற்கான நடைமுறையும் இல்லை.

எனவேதான் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் மத்திய அரசு இந்த பிரச்சினையை கையாண்டு வருகிறது. அகில இந்திய தலைவர்கள் இடையே ஜல்லிக்கட்டு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தமிழக பா.ஜனதாவின் அழுத்தம் காரணமாக ஜல்லிக் கட்டு உறுதியாக நடைபெற வேண்டும் என்ற வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுவக்கீல் தெளிவாகவும், வலிமையாகவும் எடுத்து வைத்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிரானது அல்ல என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. எங்கள் நோக்கம் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதுதான். ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், தடைபட்டு விடக்கூடாது என்பதுதான் என்பது தான் எங்கள் நோக்கம்.

முக்கிய பிரச்சினைகளில் நீதிமன்றமும் மக்கள் உணர்வு களோடு ஒன்றியிருக்க வேண்டும். ஒருமருந்தை இன்று கொடுத்தால்தான் நோயாளி காப்பாற்றப்படுவான் என்று இருக்கும்போது நாளைதான் அந்த மருந்தை கொடுப்போம் என்பதை போல்தான் சுப்ரீம் கோர்ட்டின் கருத்தும் இருக்கிறது.
 

 

இனியும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக் கட்டை நடத்துவது தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தும் என்றார்.

பின்னர் அவர் பா.ஜ.க. உறுப்பினர்சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இந்த உறுப்பினர் சேர்க்கை ஒருமாதம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...