மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.இதன்மூலம் கள்ளச்சந்தையில் ஈடுபடுவோர், பணம் ஈட்டமுடியாமல் தவிக்கின்றனர். பதுக்கி வைக்கப் பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதவையானதால், பதுக்கல் காரர்கள் மற்றும் வரி ஏய்ப்பு செய்வோர் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இதனால் வங்கிப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. முறையான நிதி மேலாண்மை கடைபிடிக்கப்படுகிறது. இனி, வரி ஏய்ப்பு செய்வது அவ்வளவு சுலபமல்ல. இதனால் நாட்டின்பொருளாதாரம் வளர்ச்சி அடையும். விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவைவரி திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு, அதிக வரி வருவாய் கிடைக்கும்.
பெரும்பாலான மாநிலங்கள், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளதால், மிக விரைவில் இந்த வரி விதிப்பு முறை நடைமுறைபடுத்தப்படும். மத்திய அரசின் இந்ததிட்டங்களால், எதிர் காலத்தில் நாட்டின் பொருளதாரம் மிகவேகமான வளர்ச்சியை சந்திக்கும்;
இவை, நீண்ட கால அடிப்படையில் நல்லபலன் தரக்கூடியவை. ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதுடன், அந்தமாநிலத்தின் வளர்ச்சியில், மத்திய அரசு கூடுதல் கவனம்செலுத்தும். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற, தேவையான நிதி ஒதுக்கப்படும். மற்றெந்த மாநிலங்களைவிட,ஆந்திர மாநிலம், தொழில், வர்த்தம் மற்றும் பொருளாதார ரீதியில் வேகமாக வளர்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.
–
அருண் ஜெட்லி மத்திய நிதியமைச்சர், பா.ஜ.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.