உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாஜக சலுகைகள் பலவற்றை அறிவித்துள்ளது.
இதில் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, உ.பி. அரசு வேலையில் கிளாஸ் 3, கிளாஸ் 4 ஊழியர்கள் தேர்வுக்கு நேர்காணல்கிடையாது போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.
‘மக்கள் நலனுக்கான உறுதிமொழி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்ததேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்டார்.
அவர் மேலும் கூறும்போது அகிலேஷ்யாதவ் அரசின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். “உ.பி.க்கு மத்திய அரசு ரூ.1 லட்சம்கோடி நிதியளித்தது, ஆனால் அடிமட்டத்தில் எந்த ஒருவளர்ச்சியும் ஏற்படவில்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் எல்லைக்குச் சென்றுள்ளது.
சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளினால் உ.பி.15 ஆண்டுகளாக அழிவுப் பாதையில் சென்று விட்டது. நாங்கள் மாநிலத்தை மாற்றும் உறுதிமொழியுடன் வந்துள்ளோம்.
மாநிலத்தில் குண்டர்களால் நிலங்கள் அபகரிப்பு செய்யப் பட்டதற்கு ஆளும் அகிலேஷ் யாதவ் அரசு பதில்கூறியாக வேண்டும்.
உ.பி.யில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை தடுக்க சிறப்புபடை அமைக்கப்படும். வகுப்புவாத பதற்றங்களினால் மக்கள் வெளியேறுவதைத்தடுக்க பாஜக மாவட்ட அளவில் குழுவை அமைக்கும்” என்றார் அமித்ஷா.
முத்தலாக் பற்றி கூறும் போது, பாஜக இதுகுறித்து தன்கருத்தை, பெண்களிடம் கருத்தை கேட்டறிந்த பிறகு உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார் அமித்ஷா.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.