இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும்

விவசாயிகள், ஏழைகள், தலித்மக்கள், வேளாண்மை, கிராமங்கள் ஆகியவற்றை மனதில்வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும்' என பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்தியபட்ஜெட் குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த பட்ஜெட் எதிர்காலத்துக்கான பட்ஜெட். விவசாயிகள், ஏழை எளியமக்களின் நலன், வெளிப்படைதன்மை, ஊரக வளர்ச்சி, நகரங்கள் மேம்பாடு ஆகியவற்றுக்காக இந்த பட்ஜெட் உருவாக்கப் பட்டுள்ளது. மிகவும் நல்ல பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும்.

கிராமங்களில் நிலவும் பொருளாதார சூழ்நிலை களில் இந்த பட்ஜெட் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். நடுத்தர மக்களின் வருவாயை உயர்த்தும். ரயில்வேதுறையை நவீனப்படுத்துவது முதல் பொருளாதார சீர்திருத்தம் வரை, கல்வி துறை முதல் சுகாதாரத்துறை வரை, தொழில்முனைவோர் முதல் தொழிற்சாலைகள் வரை என அனைத்து தரப்பு கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் தெளிவான முறையில் இந்தபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்காகவும், பெண்கள் நலனுக்காகவும் இந்தபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை சாதனைக்குரியது. கறுப்புப்பணம் மற்றும் ஊழலை அடியோடு வேரறுக்கும் வகையிலான அம்சங்கள் இந்தபட்ஜெடில் வலுவாக எதிரொலிக்கிறது. வரிஏய்ப்புகளை குறைத்து, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தி டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலான விரிவான திட்டங்கள் இந்த் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

தனிநபர் வருமான வரி 5 சதவீதம் குறைக்கப் பட்டதன் மூலம் குறைவான ஊதியம்பெறும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பயன் பெறுவர். ஊழல் மிகுந்த அரசியலை தூய்மைப்படுத்தும் வகையில் இந்தபட்ஜெட்டில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வந்துசேரும் நன்கொடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுபட்ஜெட்டுடன், ரயில்வேபட்ஜெட்டும் இணைக்கப்பட்டதன் மூலம், ரயில்வே துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்" என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...