என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சமாதியில் தியானம்செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திராசென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தாபுயல் நிவாரணம் போன்றவற்றின்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இது பிடிக்காமல் எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.
இறுதியில் கட்டாயப்படுத்தியே என்னிடம் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய கூறி கடிதம் பெற்றனர். அம்மாவின் சமாதிக்கு சென்று அவரின் ஆன்மாவிடம் ஆசிபெற்றுவிட்டு ராஜினாமா கடிதம் தருகிறேன் என்று சொன்னதைகூட அவர்கள் ஏற்கவில்லை. பிறகு போய் ஆசிபெறலாம் என கூறினர். கட்டாயத்தின் பேரில்தான் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்து கடிதம் கொடுத்தேன். ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவரது வழிநின்று ஆட்சிபுரிபவர்கள் வேண்டும். பன்னீர்செல்வம் என்று இல்லை யாராக இருந்தாலும் சரிதான். மக்களால் விரும்புபவரே முதல்வராகவேண்டும். இதற்காக நான் தனியாக நின்று போராடுவேன். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.