பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண் அடைந்திரு ப்பதாகவும், தீவிரவாதிகளின் செயல் பாடுகள் குறைந்துள்ளதாகவும் மாநிலங்களைவையில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது, ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குபின்னர், நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
பணநீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் நாடுமுழுவதும் 700க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந் துள்ளனர்.
பணம் எடுக்க விதிக்கப் பட்ட கட்டுப்பாடு காரணமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்தை தூண்டுவோர் பணம் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதனால் அங்கு வன்முறை குறைந்தது. பொருளாரத்தை சீர்குலைக்கும் கள்ளநோட்டுகள் ஒழிக்கப் பட்டுள்ளன. கருப்பு பணம் வைத்திருந்தோர், தீவிரவாத அமைப்புகள், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்கள், போதை பொருட்கள்விற்போர், ஹவாலா பேர்வழிகள் ஆகியோரின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பலஇடங்களில் முடக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்துள்ளது. இதன்மூலம், வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.