“சொத்துகுவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று வழங்கிய இந்த தீர்ப்பு ஊழலுக்குகிடைத்த மிகப்பெரிய அடி. ஊழல் ஒழிப்புதான் பா.ஜனதாவின் பிரதான நோக்கமாக இருந்துவருகிறது.
ஊழல் ஒழிந்தால்தான் அரசியல் தூய்மையாகும். நல்ல அரசியல்வாதிகள் உருவாகுவார்கள். தேர்தல் நேர்மையாக நடைபெறும். மக்களுக்கு நல்லதுநடக்கும். இப்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பு மக்களுக்கான தீர்ப்பு.
தமிழ்நாடும், மக்களும் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள். பணத்தைகொண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்குவாங்கும் சூழல் தற்போது இருந்துவருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊழல்கரையற்ற ஆட்சி நடத்தி வந்தார்.
யாருடைய நட்பினால் ஊழல் ஏற்பட்டிருக்கிறது என்று அனை வருக்கும் தெரியவந்துள்ளது. இந்ததீர்ப்பு வருங்காலத்தில் அரசியல் வாதிகளுக்கு ஒருநல்ல பாடம்.
தமிழகத்தில் பா.ஜனதா கால்ஊன்ற முடியாத நிலைக்கு பணம் தான் காரணம். இந்த தீர்ப்பை மக்களில் ஒருவராக இருந்து நான் ஏற்றுக்கொள்கிறேன்.
கவர்னர் பொறுமையாக இருக்கிறார் என்று சொன்ன கி.வீரமணி, திருமாவளவன், திருநாவுக்கரசு எல்லாம் எங்கேபோவார்கள். ஆளுனர் காத்திருந்தது சரிதான் என்று இந்ததீர்ப்பினால் தெரியவந்துள்ளது.
தமிழக பொறுப்புகவர்னர் அனுபவம் வாய்ந்தவர். உள்துறை பொறுப்பில் வல்லுனர். அதனால் அவருக்குதெரியும். வாரம் ஒருமுறை பதவி பிரமாணம் செய்யமுடியாது.
இனிமேல் அரசியல் சட்டத் திட்டங்களுக்குட்பட்டு கவர்னர் முடிவெடுப்பார். நல்லவர்கள் நேர்மையானவர்கள் ஆட்சி அமைக்கவேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.