ஓ. பன்னீர் செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை

முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் பின்னணியில் பாஜக இல்லை என பாஜக.,வின் தேசியச்செயலர் எச். ராஜா தெரிவித்தார்.திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 20 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்வழியே, ஊடகங்கள், சசிகலா தரப்பில் ஆளுநர் காலம்தாழ்த்துவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நியாயமானதல்ல என்பது புரிந்திருக்கும்.

தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக உருவாக்கப்பட்ட அரசியல்குழப்பம் முடிவுக்கு வருவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. அடுத்தமுதல்வரை தேர்ந்தெடுப்பதில் அனுபவமும், போதிய சட்ட அறிவும் பெற்றுள்ள தமிழக ஆளுநர் சரியான முடிவெடுப்பார்.


சட்டப்பேரவையைக் கூட்டி யாருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் பலம்உள்ளதோ அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கவேண்டும். அதுவே வெளிப்படையான வழியாகஇருக்கும்.


முன்னதாக தமிழக முதல்வர் காவல் துறை உதவியுடன் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை விடுவிக்கவேண்டும். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சிஅமைக்க திமுகவின் உதவியை நாடினால் அதிமுக வாக்காளர்களின் செல்வாக்கை அவர்கள் இழக்கநேரிடும். எனவே, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வராகவேண்டும்.


முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்பாட்டின் பின்னணியில் பாஜக இல்லை. மாறாக, மாநிலஅரசின் வளர்ச்சியின் பின்புலத்தில் பாஜக உறுதுணையாக இருக்கும் என்றார் ராஜா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...