நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப்பிள்ளை

நான் உத்தரப் பிரதேசத்தின் தத்துப்பிள்ளை’ என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் ஹர்டோய், பாராபங்கி உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம்செய்தார். அவர் பேசியதாவது:

பகவான் கிருஷ்ணர் உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார். எனினும் குஜராத் அவரது கர்மபூமியானது. நான் குஜராத்தில் பிறந்தேன். என்னை உத்தரப் பிரதேசம் தத்தெடுத்துக்கொண்டது.

நீங்கள் என்னைத் தத்துப் பிள்ளையாக தேர்வு செய்திருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட நான் கடமைப்பட்டிருக்கிறேன். உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுகிறேன்.

இது கங்கை, யமுனைபாயும் பூமி. வளமான மண், கோடிக் கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம். ஆனாலும் இன்னமும் வறுமை மறையவில்லை. இதற்கு யார்காரணம்? நிச்சயமாக மக்கள் இல்லை. மாநிலத்தை ஆட்சிசெய்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளே காரணம். இந்த 3 கட்சிகளிடம் இருந்தும் உத்தரப் பிரதேசம் விடுபட்டால் தான் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைத்தால் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்படும். உத்தரப் பிரதேசத்தில் இருந்து வறுமை ஒழிக்கப்பட்டால் தான் நாடு முழுவதும் வறுமை ஒழியும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...