403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதில் முதல் 2 கட்டதேர்தல் முடிவடைந்த நிலையில் 3-ம் கட்டதேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பதேபூர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரச்சார உரையாற்றினார்.
அப்போது மோடி பேசியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டுதேர்தலில், காங்கிரஸ் கட்சி சிலிண்டர் பிரச்சனையை கையிலெடுத்து வாக்குகேட்டது. ஆனால் 1.15 கோடி மக்கள் தங்களது சிலிண்டருக்கான மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
என்னுடைய தாய் விறகை கொண்டு சமைத்துவந்தார். அது மோசமானது என்று நான் உணர்ந்துவந்தேன். அதனால் தான் தேர்தலில் வெற்றிபெற்றால் சிலிண்டருக்கு இலவச இணைப்பு வழங்குவது என்று முடிவெடுத்தேன். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் 1.45 கோடி மக்களுக்கு இலவச இணைப்புகளை வழங்கியுள்ளோம்.
எல்.இ.டி பல்புகளில் பயங்கர ஊழல்நடைபெற்று வந்தது. ஒரு பல்பு ரூ.300-ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு எல்.இ.டி. பல்புகள் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. ஒரு பல்பு ரூ.80-90க்கு விற்கப்படுகிறது.
எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் உங்களிடம் வந்து வாக்குகள் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும்தான் வளர்ச்சியை கூறி வாக்கு கேட்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.