தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது அது மக்களிடம் எந்த தாக்கத்தையாவது ஏற்படுத்துமா என்பது சந்தேகம் ஏனென்றால் இந்த அரசாங்கத்தை எந்த ஒரு பொருட்டாகவும் மக்கள் எடுத்துக்கொள்ளவில்லை அதுமட்டுமல்ல 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி கடனோடு இந்த மாநிலம் இருக்கிறது என்று சொல்லி இருப்பது இது கடனில் அழுத்தப்பட்ட மாநிலம் என்பதை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது அதேபோல் அவர்கள் ஒதுக்கி இருக்கும் நிதிக்கும் அவர்கள் சொல்லி இருக்கும் திட்டத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது, திட்டத்திற்கு ஏற்ற செலவினை அவர்கள் குறிப்பிடவில்லை
உதாரணத்திற்கு சென்னை நகர்புற கட்டமைப்பிற்காக 240 கோடி என்று சொல்கிறார்கள் அப்படி பார்த்தால் சென்னையில் அடிப்படை கட்டமைப்பு இல்லாத காரணத்தால் மழையில் தத்தளித்தது அதே நேரத்தில் இன்று வறட்சியில் பாதிக்கப்பட்டிருப்பதும் அதே காரணத்தினால் தான். அதனால் ஒரு தெளிவற்ற நிலையிலேயே பட்ஜெட் இருக்கிறது இன்னொன்று வரியில்லாத பட்ஜெட் என்று சொல்கிறார்கள் ஆனால் வரி சுமையை ஏற்கனவே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னாள் வாட் வரியை ஏற்றிவிட்டு அதன் மூலம் பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிவிட்டு மறைமுகமாக அனைத்து அத்யாவசிய பொருட்கள் விலையும் ஏற்றப்பட்டு, பேருந்து கட்டணம் வரை ஏற்றப்பட்டுள்ளது அதனால் பால், தயிர் விலை ஏறி இருக்கிறது,
கட்டுமான பொருட்கள் விலை ஏறி இருக்கிறது இவையெல்லாம் பார்க்கும்பொழுது இப்போது வரி இல்லை என்று சொல்ல வேண்டும் என்பதற்காக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே வாட் வரி விதித்து மக்களை வாட்டி வதைத்துவிட்டார்கள் அதேபோல உதய் திட்டத்தினால் இழப்பு என்று சொல்கிறார்கள் ஆனால் உதய் திட்டத்தினால் 11,000 கோடி லாபம் கிடைக்கிறது, தமிழக மின் வாரியம் தான் அதிக கடன் சுமையுள்ள மின் வாரியமாக இருந்துகொண்டிருக்கிறது அதன் கடன் தள்ளுபடியாக 7000 கோடியை மத்திய அரசு தான் அளித்திருக்கிறது, உதய் திட்டத்தில் சேர்ந்ததால் 11,000 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது, மின் வாரியத்திற்கு ஏன் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் 2 1/2 (இரண்டரை) ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் மத்திய அரசிடம் கிடைக்கும்போது தனியார் நிறுவனங்களிடமிருந்து தமிழக அரசு 6 -7 ரூபாய் வரை ஒரு யூனிட் மின்சாரம் வாங்கியதால் தான் அந்த மின் சுமையும் ஏற்பட்டது. இன்று மக்கள் ரேஷன் பொருட்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை ஆக ஒட்டு மொத்தமாக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட் இது இல்லை, மக்களை ஏமாற்றும் பட்ஜெட்டாகவே இது அமைந்திருக்கிறது – டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.