நேற்று, மத்தியநிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ஜெட்லி, ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல் படுத்துவதற்கான அறிவிப்பை இறுதிசெய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் ஒரு முனை வரி விதிப்பைக் கொண்டுவரும் வகையில், சரக்கு மற்றும் சேவைவரிகளை (Goods and Services Tax) அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி சட்டம் அமல் படுத்துவதற்கான புதிய சட்டத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் பட்டது. எனவே ஜிஎஸ்டி சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.