ஜிஎஸ்டி தொடர்பானமசோதா மற்றும் 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி லேபாக்சபாவில் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி ஜூலை 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு வழிவகைசெய்யும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா கடந்த சிலநாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல்பெறப்பட்டது. இந்த மசோதாக்கள் கடந்த வாரமே பார்லியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அருண்ஜெட்லி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.
இதன்படி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி, இழப்பீடுவழங்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 4 துணை மசோதாக்களும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவும் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அருண்ஜெட்லி இவற்றை தாக்கல்செய்தார். இந்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.