மத்திய அரசு வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விட முடிவு செய்துள்ளது. ஏலம்விடுவது தொடர்பான கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்காக பலதரப்பினரின் ஆலோசனை களை மத்திய நிலக்கரி அமைச்சகம் கோரியுள்ளது. இந்தமுடிவுகள் வந்தவுடன் அதன் அடிப்படையில் ஏலம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடுவது தொடர்பான வரைவுகொள்கை சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதுதொடர்பாக பொது மக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்பட்டன. பொது ஏலத்தில் விடுவதற்கான சுரங்கங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளதாக மத்திய மின்சாரம், சுரங்கம் மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.
வர்த்தக ரீதியில் ஏலம்விடுவதில் சிறிய மற்றும் பெரியசுரங்கங்கள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். வரைவுகொள்கை தொடர்பான கருத்துகள் இம்மாதம் 26-ம் தேதிவரை பெறப்பட்டு அதனடிப்படை யில் கொள்கை வகுக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் சுரங்கங்கள் ஏலம்விடப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
வர்த்தக ரீதியிலான சுரங்கங்களை ஏலம் விடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை. இதற்கு மத்திய அமைச்சர் அனுமதி இருந்தாலே போதுமானது என்று சுரங்கத் துறைச் செயலர் சுஷீல் குமார் தெரிவித்தார்.
மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு போட்டியாக வர்த்தகரீதியிலான சுரங்கங்களை உருவாக்கலாம் என பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இத்தகைய வர்த்தக சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அப்போதைய சந்தை நிலவரத்துக்கேற்ப தீர்மானிக்க அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டது.
தற்போது 3 பெரியசுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் சொத்துமதிப்பு ரூ.1,500 கோடிக்குக் குறைவாக இருக்கக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 கோடி சதுரமீட்டர் அளவுக்கு சுரங்கம் வெட்டியுள்ள நிறுவனமாக இருக்கவேண்டும் என்ற விதிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துறையில் அனுபவம்மிக்க நிறுவனங்கள் கூட்டுசேர்ந்தும் ஏலத்தில் பங்கேற்கலாம் என விதிமுறையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி தற்போது கணிசமாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் செய்யூரில் உள்ள அனல் மின்நிலையம் இறக்குமதி நிலக்கரிமூலம் செயல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. இனி இதுமுழுவதும் உள்நாட்டு நிலக்கரிமூலம் செயல்படுத்த முடியும் என்று சுஷில்குமார் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலக்கரிகையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டவர், மார்ச் மாத நிலவரப்படி தற்போது 6.9 கோடி டன் நிலக்கரி உள்ளதாகத் தெரிவித்தார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.