வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களைத்தேர்தலில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெற்றிவாகை சூட பாஜகவை தயார்படுத்தவேண்டும் என்று கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறைக்கூவல் விடுத்துள்ளார்.
இது குறித்து பாஜக ஆண்டு விழாவையொட்டி தில்லியில் வியாழக் கிழமை நடைபெற்ற கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:
பாஜக ஆணடு விழாவையொட்டி நாடுமுழுவதும் 8 நாள் பிரசாரவிழா நடத்தப்படவுள்ளது. இந்த விழாவில், கட்சித் தலைமையின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செயல்பட்டு, நமக்கு பலம்குறைந்த தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கை வளர்க்க பாஜக எம்.பி.க்கள் பாடுபடவேண்டும்.
மக்களிடையே பாஜகவின் செல்வாக்கை வளர்ப்பதற்கு, நரேந்திரமோடி தலைமையிலான குஜராத் மாநிலத்தை கட்சித் தலைவர்கள் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும்.சிறந்த நிர்வாகம், அனைவருக்கும் வளர்ச்சி என்ற நரேந்திரமோடியின் தலைமைப் பாணியை பின்பற்றி, மாநிலத்தலைவர்கள் கட்சியை வளர்க்கவேண்டும்.
சாதி அரசியல், குடும்ப அரசியல், வாக்குவங்கி அரசியல் ஆகிய மூன்றும் தான் இந்திய அரசியலுக்கு பிடித்த சாபக்கேடு என்று நரேந்திரமோடி கடந்த 2014-ஆம் ஆண்டு கூறினார்.
அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததன் மூலம் அந்த மூன்றுக்கும் மக்கள் மரண அடிகொடுத்தனர். தற்போது உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து, சாதி, குடும்ப, வாக்குவங்கி அரசியலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள 1,600-க்கும் மேற்பட்ட கட்சிகளில், பாஜக மட்டும்தான் தனது கொள்கையின் பலத்தைக்கொண்டு பரவிவருகிறது. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புத்தேர்தலை நடத்தி, உள்கட்சி ஜனநாயகத்தைப் பேணிக்காத்து வருகிறது.
கடந்த 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமதுகட்சிக்கு, தற்போது அதிகபட்ச எண்ணிக்கையாக 281 எம்.பி.க்களும், பல்வேறு மாநிலங்களில் 1,398 எம்எல்ஏக்களும் உள்ளனர். 13 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார் அமித் ஷா.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.